இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வரும் இவர்கள் ஆரம்பத்தில் எவ்வளவு கஷ்டங்களை கடந்து வந்தார்கள் என்பது பெரிதும் யாருக்கும் தெரியாத ஒன்று. அந்த வகையில் நயன்தாரா முதல் ராஷ்மிகா வரை என்ன படித்து உள்ளார்கள் என்பதை காணலாம்.
நயன்தாரா :
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக தற்போது வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் கேரளாவில் உள்ள மார்தோமா என்ற கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.
சமந்தா:
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தன்னுடைய நடிப்பு மூலம் பல வெற்றி படங்களை கொடுத்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் சமந்தா. இவர் சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் படித்து வணிகவியல் துறையில் பட்டம் பெற்றார்.
த்ரிஷா :
கதாநாயகியாக மௌனம் பேசியதே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிறகு சாமி, கில்லி,ஆறு ஆகிய படங்களில் முன்னணி நாயகர்களுடன் நடித்து பிரபலமானவர் த்ரிஷா. இவர் சென்னையில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் (பிபிஏ) பட்டம் பெற்றார்.
காஜல் அகர்வால் :
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக இருப்பவர் காஜல் அகர்வால். இவர் தமிழில் துப்பாக்கி, மாற்றான் போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை சம்பாதித்தவர். இவர் மும்பையில் உள்ள கேசி கல்லூரியில் இளங்கலை பிரிவில் மாஸ் மீடியா படித்துள்ளார்.
தமன்னா :
இந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா. நடனம், நடிப்பு மற்றும் அவர் அழகு மூலம் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர். மும்பையில் உள்ள தேசிய கல்லூரியில் கலைப் பட்டம் பெற்றுள்ளார்.
சாய் பல்லவி :
சிறந்த நடிப்பு மற்றும் அவருடைய அழகிய நடனத்தால் பிரபலம் அடைந்த சாய் பல்லவி MBBS பட்டப்படிப்பை ஜார்ஜியாவில் உள்ள திபிலிசி என்ற மருத்துவ பல்கலைக்கழகத்தில் படித்து முடித்தார்.
ராஷ்மிகா மந்தனா :
கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. இவர் பெங்களூரில் உள்ள எம்.எஸ். ராமையா கலை,கல்லூரியில் உளவியல், இதழியல் மற்றும் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.