வெண்ணிற ஆடை மூர்த்தி
தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து 3 தலைமுறைகளுக்கு மேலாக தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்தவர் வெண்ணிற ஆடை மூர்த்தி.
இவர் பல்வேறு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் காமெடியனாக நடித்து பிறகு சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் வில்லனாக நடித்து எம்ஜிஆர், சிவாஜி தொடங்கி ரஜினி, கமல், அஜித், விஜய் வரை பலருடன் நடித்து பிரபலமானார். அதுமட்டுமின்றி, குணசித்திர கதாப்பாத்திரங்களிலும் இவர் நடித்துள்ளார்.
வெண்ணிற மூர்த்தி நடிக்கும் படங்களில் பேசும் வசனங்கள் பாதி இரட்டை அர்த்தத்தில் இருக்கும், இருப்பினும் பல ரசிகர்களை சினிமாவில் சம்பாதித்தார். அந்த அளவிற்கு தன் காமெடி திறமை மூலம் பலரை கவர்ந்தவர்.
வெண்ணிற ஆடை மூர்த்தியின் மனைவி
இந்த நிலையில், இவரின் மனைவியும் ஒரு நடிகை தான் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. ஆம், வெண்ணிற மூர்த்தியின் மனைவி வேறு யாருமில்லை பிரபல நடிகை மணிபாலா தான்.
இவர் ரஜினியுடன் இணைந்து அன்புள்ள ரஜினிகாந்த் மற்றும் சிந்து பைரவி போன்ற வெற்றி படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.