ஜாக்குலின்
சொந்தமாக வீடு, சொந்த கார் வைத்திருக்க வேண்டும் என பல கனவுகள் மக்களிடம் உள்ளது.
சாதாரண மக்களை தாண்டி பிரபலங்களுக்கு நிறைய கனவுகள் உள்ளது.
இன்றைய காலகட்டத்தில் சொந்தமாக நிலம் வைத்திருப்பதே பெரிய விஷயமாக இருக்கும் நிலையில் பாலிவுட் பிரபலங்கள் 3 பேர் தனியாக தீவு சொந்தமாக வைத்துள்ளனர்.
அப்படி தீவு வைத்துள்ள 3 பிரபலங்களில் ஒரு பெண் பிரபலமும் உள்ளார். அவர் யார், எங்கே வைத்துள்ளார் என்பதை நாம் கீழே உள்ள பதிவில் காண்போம்.
யார் அவர்
ஒரு நடிகை வைத்திருக்கிறார் என்று சொன்னதுமே டாப் நாயகிகளை தான் அனைவரும் யோசிப்பீர்கள். ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே என இப்படி யாரும் இல்லை.
தனியார் தீவை சொந்தமாக வைத்திருப்பவர் நடிகை ஜாக்குவின் பெர்னாண்டஸ் தான்.
பாலிவுட்டில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் இவரும் ஒருவர். இலங்கை பெண்ணான இவர் கடந்த 2021ம் ஆண்டு இங்கு ஓரு தனியார் தீவை சொந்தமாக வாங்கியுள்ளார்.
சுமார் 600 ஆயிரம் டாலர்களை செலவு செய்து நடிகை ஜாக்குலின் தனியார் தீவை வாங்கியதாக சொல்லப்படுகிறது.