ஹேமா கமிஷன்
சினிமா மீது ஆசை உள்ள பெண் கலைஞர்கள் அதில் சாதிக்க நிறைய கஷ்டப்படுகிறார்கள்.
அதில் முதல் விஷயம் காஸ்டிங் கவுச் தான். இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் சமரசம் செய்தால் தான் வாய்ப்பு என கூற சிலர் சம்மதித்து வாய்ப்பு பெற்று நடித்தாலும் பலர் நிராகரித்து வேறு வேலைக்கு சென்றுவிடுகிறார்கள்.
தற்போது மலையாள திரையுலகில் பாலியல் சீண்டல் அதிக அளவில் காணப்படுவதாக ஹேமா கமிட்டி அறிக்கையில் வெளியாக பரபரப்பாக பேசப்படுகிறது.
அறிக்கை வெளியானதும் பரபரப்பாக பேசப்பட மலையாள நடிகர் சங்கத் தலைவர் பதவியில் இருந்து மோகன்லால் உட்பட ஒட்டுமொத்த நிர்வாகிகளும் ராஜினாமா செய்தனர்.
மோகன்லால் பேட்டி
இந்த சம்பவம் குறித்து எதுவும் பேசாமல் ராஜினாமா செய்தவர்கள் கோழைகள் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மோகன்லால், ஹேமா கமிட்டி அறிக்கையில் முழுமையாக என்ன இருக்கிறது என்பது எனக்கு தெரியாது, மலையாள சினிமாவை இந்த பிரச்சனையில் இருந்து காக்க வேண்டும்.
மலையாள திரையுலகில் 21 சங்கங்கள் இருக்கும்போது அம்மா சங்கத்தை மட்டும் எப்படி சொல்ல முடியும். நான் எங்கும் ஓடவில்லை, இங்குதான் இருக்கிறேன்.
பாலியல் புகார்கள் தொடர்பாக நீதிபதி ஹேமா குழு மேற்கொள்ளும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என பேசியுள்ளார்.