பாலியல் சர்ச்சைகள் பற்றி தான் தற்போது ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா துறையினரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். மலையாள சினிமாவில் பற்றிய தீ தற்போது தமிழ், தெலுங்கு என மற்ற சினிமா துறையினரையும் பேச வைத்து இருக்கிறது.
இது பற்றி செய்தியாளர்கள் கேள்விக்கு நடிகர் ஜீவா பதில் அளிக்கும்போது, ‘தமிழ் சினிமாவில் பாலியல் பிரச்சனை இல்லை’ என கூறி இருக்கிறார். மேலும் கேள்வி கேட்ட ரிப்போட்டரை ‘அறிவு இருக்கா’ என திட்டி ஜீவா சண்டை போட்டிருக்கிறார்.
கொந்தளித்த சின்மயி
பாடகி சின்மயி இது பற்றி கோபமாக ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
“எனக்கு புரியவே இல்லை. தமிழ் சினிமாவில் பாலியல் சீண்டல்கள் இல்லவே இல்லை என அவர்கள் எப்படி சொல்கிறார்கள். எப்படி?” என சின்மயி ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.