Monday, January 20, 2025
Homeசினிமாஇரண்டு மாதங்களுக்கு மேல் அழுதேன்.. முன்னணி இயக்குனர் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்த விக்ரம்

இரண்டு மாதங்களுக்கு மேல் அழுதேன்.. முன்னணி இயக்குனர் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்த விக்ரம்


விக்ரம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் விக்ரம். இவர் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் தங்கலான். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 100 கோடி வரை வசூல் ஈட்டியது என அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், தங்கலான் படத்தின் வெற்றியை கொண்டாடி வரும் விக்ரம், தான் ஒரு வெற்றி பெற்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்தது பற்றி நினைவு கூர்ந்தார்.

வாய்ப்பை இழந்தது விக்ரம்



அதாவது, மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பம்பாய் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் விக்ரம் தேர்வு செய்யப்பட்டதாகவும், ஆனால் இறுதி ஆடிஷன் நடக்கும் போது தான் ஒரு தவறு செய்ததால் அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டதாகவும் இறுதியில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு அரவிந்த் சுவாமிக்கு கிடைத்தது என்றும் கூறினார்.

இரண்டு மாதங்களுக்கு மேல் அழுதேன்.. முன்னணி இயக்குனர் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்த விக்ரம் | Vikram Talks About Losing Movie Opportunity

மேலும், இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்த பிறகு, நான் மிகவும் வருத்தப்பட்டு இரண்டு மாதங்களுக்கு மேல் அழுதேன் எனவும், மணிரத்னம் சார் படத்தில் நடிக்க வேண்டும் என்பது தனது கனவாக இருந்தது என்றும், ஆனால் தற்போது அவர் இயக்கத்தில் ராவணன் படத்திலும், அதை தொடர்ந்து வெளிவந்த பொன்னியின் செல்வன் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனது நீண்ட நாள் கனவை பூர்த்தி செய்ததாகவும் விக்ரம் பகிர்ந்து கொண்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments