ஆயிஷா
பிக்பாஸ் விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஓடிய ஒரு நிகழ்ச்சி. 100 நாட்கள், காமெடி, கலகலப்பு, சர்ச்சை, காதல், நட்பு, எமோஷன் என எல்லாம் கலந்த கலவையாக இந்த ஷோ இருந்து வருகிறது.
7வது சீசன் முடிந்ததை தொடர்ந்து விரைவில் 8வது சீசன் தொடங்கவுள்ளது.
இந்த 8வது சீசனில் ஒரு ஸ்பெஷல், அதாவது தொகுப்பாளர் தான். நடிகர் விஜய் சேதுபதி தான் பிக்பாஸ் 8வது சீசனை தொகுத்து வழங்கி இருக்கிறார், நேற்று தான் அந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியானது.
Host ஆயிஷா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பொன்மகள் வந்தாள் என்ற சீரியல் மூலம் தொலைக்காட்சியில் பயணத்தை தொடங்கியவர் நடிகை ஆயிஷா. பின் ஜீ தமிழின் சத்யா சீரியலில் நடித்து ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனார்.
தெலுங்கிலும் சாவித்திரிம்மா கரி அப்பாயி என்ற தொடரில் நடித்திருக்கும் இவர் பிக்பாஸ் 6ல் 50 நாட்களுக்கு மேலாக இருந்தார். தற்போது நடிகை ஆயிஷா, சமையல் எக்ஸ்பிரஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறாராம்.
ஜீ தமிழில் ஒளிபரப்பாக போகும் இந்த நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 15ம் தேதி தொடங்க இருக்கிறதாம்.