அக்ஷய் குமார்
பாலிவுட் சினிமாவில் 1991ம் ஆண்டு சௌகான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் அக்ஷய்குமார்.
முதல் படமே வெற்றியை கொடுக்க மை கிலாடி து அனாரி மற்றும் மோஹ்ரா படங்களில் நடித்து மாஸ் ஹீரோவாக வளர்ந்தார்.
பாலிவுட்டை ராஜ்ஜியம் செய்த கான்களுக்கு இடையில் நல்ல நல்ல படங்கள் கொடுத்து தனக்கென அங்கீகாரத்தை உருவாக்கினார்.
தமிழில் இவர் ரஜினியின் 2.0 படத்தில் நடித்து இங்கேயும் பிரபலம் ஆனார்.
சொத்து மதிப்பு
இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் அக்ஷய் குமாருக்கு காலை முதல் பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் நடிகர் அக்ஷய் குமாரின் சொத்து மதிப்பு விவரம் வைரலாகி வருகிறது. ஒரு படத்திற்கு ரூ. 40 கோடி மேல் சம்பளம் வாங்கும் அக்ஷய் குமாரின் ஆண்டு வருமானம் ரூ. 80 கோடி என்கின்றனர்.
விளம்பரங்களில் நடித்தும் பணம் சம்பாதிக்கும் அக்ஷ்ய் குமார் ரியல் எஸ்டேட்டில் தனது பணத்தை முதலீடு செய்துள்ளார்.
மும்பை ஜுஹுவில் கடல் நோக்கிய டூப்ளெக்ஸில் வசிக்கிறார், இந்த வீட்டின் மதிப்பு மட்டும் ரூ. 7.8 கோடி இருக்குமாம்.
இந்த வீட்டை தவிர மும்பையில் அவருக்கு மேலும் 4 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளதாம்.