நடிகர் விஜய்
தமிழ் சினிமாவை ஆளும் டாப் நடிகர்களில் ஒருவர் விஜய்.
ரஜினியை அடுத்து எல்லா விஷயத்திலும் அதாவது பாக்ஸ் ஆபிஸ், மார்க்கெட், சம்பளம் என அனைத்திலும் அவருக்கு அடுத்தபடியாக உள்ளார்.
இவரது நடிப்பில் கடந்த செப்டம்பர் 5ம் தேதி கோட் படம் வெளியாகி இருந்தது, வெங்கட் பிரபு இயக்கிய இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
படமும் ரிலீஸ் ஆகி செம வசூல் வேட்டை நடத்திவர விஜய் தனது அடுத்த படத்திற்கான வேலையை தொடங்கிவிட்டார்.
அவரது 69வது படத்தை எச். வினோத் இயக்க அனிருத் இசையமைக்க இருக்கிறார்.
போட்டோ
விஜய்யின் எந்த ஒரு பட நிகழ்ச்சி என்றாலும் அவரது மனைவி சங்கீதா கண்டிப்பாக வந்துவிடுவார்.
ஆனால் கடந்த சில பட விழாக்களில் அவரை காணவில்லை, இதனால் நிறைய சர்ச்சை பேச்சுகள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.
இந்த நிலையில் விஜய்யின் மனைவி சங்கீதாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வைரலாகிறது. அவர் வெளிநாட்டில் ஒரு உணவகத்தில் இருக்கும் புகைப்படம் இதோ,