Sunday, December 22, 2024
Homeசினிமா32 ஆண்டுகளாக இளையராஜாயுடன் பணியாற்றாமல் இருந்ததற்கு காரணம் இதுதான்.. மணிரத்னம் கூறிய அதிரடி பதில்

32 ஆண்டுகளாக இளையராஜாயுடன் பணியாற்றாமல் இருந்ததற்கு காரணம் இதுதான்.. மணிரத்னம் கூறிய அதிரடி பதில்


இயக்குனர் மணிரத்னம்

இயக்குனர் பாலச்சந்தரின் படங்கள் மீது ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக திரைக்கதை அமைக்கும் பணிகளில் ஈடுப்பட்டு பிறகு பல்லவி அணு பல்லவி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மணிரத்னம்.

இளையராஜா மணிரத்னம் கூட்டணி

பிறகு, தமிழில் பகல் நிலவு என்ற படத்தை இயக்கினார். இந்த அனைத்து திரைப்படத்திற்கும் இசையமைத்தது இளையராஜா தான். இவ்வாறு இதய கோவில், மௌன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், கீதாஞ்சலி, மற்றும் தளபதி என தொடர்ச்சியாக இளையராஜாயுடன் பணியாற்றினார் மணிரத்தினம்.



இந்த நிலையில், ரோஜா படத்தில் ஏ.ஆர். ரகுமானோடு இணைந்தார். அதன்பின், 32 ஆண்டுகளாக ஏ.ஆர். ரகுமான் தான் மணிரத்னம் இயக்கும் அனைத்து படத்திலும் இசையமைக்கிறார்.

மணிரத்னம் பதில்

இதுகுறித்து, அண்மையில் மணிரத்னத்திடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த மணிரத்தினம், ”இளையராஜா மற்றும் ஏ.ஆர் ரகுமான் இருவருமே இசையில் மிகப்பெரிய ஜீனியஸ். சினிமாவில் இவர்களை போல் நேர்த்தியான கலைஞர்களை எளிதில் காண முடியாது. இவர்கள் இருவருமே எனக்கு மிகவும் பிடித்தமான இசையமைப்பாளர்கள் தான்”.

32 ஆண்டுகளாக இளையராஜாயுடன் பணியாற்றாமல் இருந்ததற்கு காரணம் இதுதான்.. மணிரத்னம் கூறிய அதிரடி பதில் | Maniratnam Says Why Not Working With Ilayaraja

ஆனால், ஏ.ஆர் ரகுமானின் இசைக்கு என்னுடைய திரைப்படங்கள் மாறியது. அந்த காரணங்களுக்காக தான் நான் இவருடன் பணியாற்றுகிறேன். மற்றபடி இளையராஜாவை வேண்டுமென்றே நான் எந்த திரைப்படத்திலும் நிராகரித்தது கிடையாது. இளையராஜாக்கு இணை அவரே” என்று கூறியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments