விஜய் டிவி
விஜய் தொலைக்காட்சி என்றாலே நமக்கு முதலில் நியாபகம் வருவது ரியாலிட்டி ஷோக்கள் தான்.
அந்த ஷோக்களை தாண்டி ரசிகர்கள் இப்போது விஜய் டிவியின் சீரியல்களுக்கும் அதிக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.
இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற தொடர்கள் எல்லாம் டிஆர்பியில் டாப்பில் வந்துகொண்டிருக்கிறது.
முடியும் தொடர்
கடந்த சில வாரங்களாகவே அன்புடன் கண்மணி என்ற புதிய தொடரின் புரொமோ வெளியாகி வந்தன, இதனால் எந்த தொடர் முடிவுக்கு வரப்போகிறது என ரசிகர்கள் நிறைய யோசித்தார்கள்.
பின் சில வாரங்களின் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வந்த செல்லம்மா தொடர் முடிவுக்கும் வந்தது.
இப்போது என்னவென்றால் விரைவில் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் இன்னொரு தொடரான முத்தழகு முடிவுக்கு வரப்போவதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.