GOAT
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் வெங்கட் பிரபு. இவர் இயக்கத்தில் முதல் முறையாக தளபதி விஜய் நடித்து வெளிவந்த திரைப்படம் GOAT.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். மாபெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழக வசூல்
இந்த நிலையில் 15 நாட்களில் தமிழகத்தில் GOAT படம் செய்துள்ள வசூல் குறித்து பார்க்கலாம். அதன்படி, தமிழ்நாட்டில் மட்டுமே 15 நாட்களில் GOAT படம் ரூ. 197 கோடி வரை வசூல் செய்துள்ளது.
இந்த வாரத்தின் இறுதிக்குள் ரூ. 200 கோடியை கடந்துவிடும் என கூறப்படுகிறது.
இதன்மூலம் லியோ படத்தை தொடர்ந்து GOAT தி ரைப்படமும் ரூ. 200 கோடி பாக்ஸ் ஆபிஸ் clubல் இணையப்போகிறது என்கின்றனர்.
பொறுத்திருந்து பார்ப்போம் GOAT படம் ரூ. 200 கோடி தமிழகத்தில் மட்டுமே வசூல் செய்து சாதனை படைக்கபோகிறதா என்று.