Thursday, January 2, 2025
Homeசினிமாஅந்த டாப் நாயகியை கட்டிப்பிடித்து நடிக்கவே சூர்யா கூச்சப்பட்டார்.. எதிர்நீச்சல் சீரியல் புகழ் மாரிமுத்து

அந்த டாப் நாயகியை கட்டிப்பிடித்து நடிக்கவே சூர்யா கூச்சப்பட்டார்.. எதிர்நீச்சல் சீரியல் புகழ் மாரிமுத்து


மாரிமுத்து

நடிகர் மாரிமுத்து, இவருக்கு இப்படியொரு இன்ட்ரோ கொடுப்பதை விட சன் டிவியில் பிரபலமாக ஓடிய எதிர்நீச்சல் சீரியல் புகழ் குணசேகரன் என்று கூறினால் தான் சரியாக இருக்கும். 

கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் பயணித்து வரும் இவருக்கு பெரிய ரீச் கொடுத்தது எதிர்நீச்சல் தொடர் தான். அதில் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார். 

உதவி இயக்குனராக, இயக்குனராக இருந்தும் ஒரு நடிகராக சின்னத்திரையில் களமிறங்கிய பிறகு தான் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்களின் பட வாய்ப்புகள் கிடைத்து பிஸியாக நடித்து வந்தவர் திடீரென உடல்நலக் குறைவால் காலமானார். 

பழைய பேட்டி

இந்த நிலையில் மாரிமுத்து அவர்கள் ஒரு பேட்டியில் சூர்யா பற்றி பேசியுள்ளார்.

அதில் அவர், நான் நேருக்கு நேர் படத்தில் வசந்திடம் உதவி இயக்குனராக இருந்தேன், அந்த படத்தில் சூர்யா நடிப்பதற்கு ரொம்பவே தடுமாறினார்.

சிம்ரனை கட்டிப்பிடிக்க சொன்னார் வசந்த், ஆனால் சூர்யாவால் அது முடியவே இல்லை, தயங்கி தயங்கி நடித்தார். ஒருகட்டத்தில் நடிப்பு என்பதை புரிந்துகொண்டு நடிக்க தொடங்கினார் என்றார்.

அந்த டாப் நாயகியை கட்டிப்பிடித்து நடிக்கவே சூர்யா கூச்சப்பட்டார்.. எதிர்நீச்சல் சீரியல் புகழ் மாரிமுத்து | Late Actor Marimuthu Interview About Suriya

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments