முன்னணி நடிகர்
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக ஜொலித்து கொண்டு இருக்கும் ஒரு நடிகர் பாலிவுட் சினிமாவில் ஹீரோ வில்லன் என்று நடித்த கதாபாத்திரம் அனைத்துமே படுதோல்வி அடைந்தது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா ?
ஆம், மலையாள சினிமாவில் மிகவும் புகழ்பெற்ற நடிகரான இவர் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தவர்.
இவர் நடிப்பில் வெளியான ‘ஆடுஜீவிதம்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.
பாலிவுட் படங்கள்
இவர் தென்னிந்திய சினிமா மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் சில படங்களில் நடித்துள்ளார்.
அந்த வகையில், 2012ம் ஆண்டு ‘ஐயாரே’ என்று படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு பெறவில்லை.
அதன் பின், 2013ம் ஆண்டு ‘ஔரங்கசீப்’ என்ற படத்தில் முக்கியமான போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த படமும் வசூலில் படுதோல்வி அடைந்தது.
இவ்வாறு மலையாளத்தில் முன்னணி நட்சத்திரமாக ஜொலிக்கும் இவர் பாலிவுட் படங்களில் நல்ல வரவேற்பு பெறாமல் பிளாப் நடிகரானார்.
அந்த நடிகர் வேறு யாரும் இல்லை, புகழ்பெற்ற நடிகர் பிரித்விராஜ் தான்.