Friday, December 27, 2024
Homeசினிமாபடத்தை என்ஜாய் பண்ணி மட்டும் பாருங்கள் வேறு எது பற்றியும் பேசாதீர்கள்.. அதிரடியாக கூறிய நடிகர்...

படத்தை என்ஜாய் பண்ணி மட்டும் பாருங்கள் வேறு எது பற்றியும் பேசாதீர்கள்.. அதிரடியாக கூறிய நடிகர் சூர்யா


நடிகர் சூர்யா  

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா.

‘சில்லுனு ஒரு காதல்’, ‘சூரரைப் போற்று’, ‘ஜெய் பீம்’, ‘அஞ்சான்’ போன்ற பல வெற்றி படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தவர்.


தற்போது, சிவா இயக்கத்தில் கே. இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் நவம்பர் 14ம் தேதி வெளிவர உள்ளது.

சூர்யா அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அவரது 44-வது படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அந்தமான் மற்றும் ஊட்டியில் நடந்து முடிந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.

சூர்யாவின் அதிரடி பேச்சு

இந்த நிலையில், சூர்யா, கார்த்தியின் மெய்யழகன் பட நிகழ்ச்சி மேடையில், படத்தை என்ஜாய் பண்ணி மட்டும் பார்க்குமாறு பேசியுள்ளார்.

படத்தை என்ஜாய் பண்ணி மட்டும் பாருங்கள் வேறு எது பற்றியும் பேசாதீர்கள்.. அதிரடியாக கூறிய நடிகர் சூர்யா | Suriya Says Only To Enjoy The Movie

அதில், “ஒரு படத்தை படமா மட்டும் என்ஜாய் பண்ணி பாருங்க, அந்த படம் வசூலில் என்ன செஞ்சதுனு வணிக ரீதியான விஷயம் குறித்து ரசிகர்கள் கவலை கொள்ள வேண்டாம்.

படம் குறித்து விமர்சனம் செய்து கொண்டு இருக்காமல் அதை என்ஜாய் செய்து பார்ப்பதுடன் விட்டு விடுங்கள். அதுதான் உண்மையான பொழுதுபோக்கு”  என்று கூறியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments