அனிருத்
சினிமாவில் ஒரு வெற்றி படங்களுக்கு பின் கதாநாயகர்கள், இயக்குனர்கள், என அந்த படக்குழுவினர் பங்கு பெரிதும் இருக்கும்.
ஆனால், அப்படம் எந்த மாதிரியான ஒரு உணர்வை ரசிகர்களிடம் எடுத்து செல்கிறது என்பது இசையமைப்பாளர் கைகளில் தான் உள்ளது.
அந்த வகையில் பல வெற்றி பாடல்களை கொடுத்து அதற்காக, பல விருதுகளை பெற்று சினிமாவில் பிரபலமடைந்தவர் அனிருத். இவர் பல முன்னணி நடிகர் படங்களில் இசையமைத்துள்ளார்.
சூர்யாவுடன் இணைந்த அனிருத்
அந்த வகையில், தற்போது, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, அவர் நடிக்கும் 45 – வது படத்தில் அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது, சூர்யா நடிப்பில் வரும் நவம்பர் மாதம் ‘கங்குவா’ படம் வெளியாக உள்ளது. இப்படத்தை தொடர்ந்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வருகிறார்.
அடுத்து, ‘சூர்யா 45’ படத்தினை ஆர்.ஜே.பாலாஜி இயக்கவுள்ளதாக தகவல் சமீபத்தில் வெளியான நிலையில், இந்த தகவல் ரசிகர்களுக்கு ஒரு பெரிய ட்ரீட்டாக அமையும் என எதிர்பாக்கப்படுகிறது.
இந்த நிலையில், ஏற்கனவே சூர்யா நடிப்பில் 2018 – ல் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தில் அனிருத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.