விஜய்யின் கோட்
நடிகர் விஜய்யின் கோட் படமே ரசிகர்களுக்கு ஸ்பெஷல் தான், இதில் இன்னொரு முக்கிய ஸ்பெஷல் என்றால் மறைந்த நடிகர் விஜயகாந்த் அவர்கள் வருவது தான்.
கடந்த 2003ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரபல நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நுரையீரல் தொற்று காரணமாக காலமானார்.
இவரது இழப்பை இன்னும் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, ஆனால் அவரை ரசிகர்கள் கோட் படத்தில் காண போகிறார்கள்.
ஏஐ தொழில்நுட்பம் மூலம் மறைந்த விஜயகாந்த் அவர்கள் விஜய்யின் கோட் படத்தில் சுமார் 10 நிமிடம் ஓடும் காட்சியில் இடம்பெற உள்ளாராம்.
இன்னொரு படம்
விஜய்யின் கோட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்காந்த் அவர்கள் ஏஐ தொழில்நுட்பம் மூலம் இன்னொரு படத்தில் இடம்பெற உள்ளாராம்.
அது யாருடைய படம் என்றால் விஜயகாந்த் இளைய மகன் சண்முக பாண்டியன் நடித்துவரும் படைத்தலைவன் என்கிற படத்தில் தான் விஜயகாந்த் காட்சி இடம்பெற உள்ளதாம். தற்போது அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.