Thursday, December 26, 2024
HomeசினிமாBad Newz: திரை விமர்சனம்

Bad Newz: திரை விமர்சனம்


விக்கி கௌஷல், த்ரிப்தி திம்ரி நடிப்பில் வெளியாகியிருக்கும் Bad Newz இந்தி திரைப்படத்தின் விமர்சனம் குறித்து இங்கே காண்போம்.

கதைக்களம்

பார்ட்டி ஒன்றில் விக்கி கௌஷலை சந்திக்கும் த்ரிப்தி திம்ரி காதல் வயப்பட, இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்கின்றனர்.

பிறகு மகிழ்ச்சியாக வாழ்க்கை செல்ல, த்ரிப்தியின் Merki Star எனும் சிறந்த Chef விருதை பெறும் கனவு விக்கியின் செயல்களால் பாதிக்கிறது.

Bad Newz: திரை விமர்சனம் | Bad Newz Movie Review


இதனால் விரக்தியடைந்த த்ரிப்தி விவாகரத்து கேட்க இருவரும் பிரிக்கின்றனர். அதன் பின்னர் முசோரியில் அமி விர்க்கை சந்திக்கும் த்ரிப்தி, ஒரு கட்டத்தில் அவருடன் உறவுகொள்கிறார்.


ஆனால், அதே நாளில் விக்கி கௌஷலும் த்ரிப்தி திம்ரியை தேடி வர, அன்று இரவே அவர்கள் இருவரும் உறவு கொள்கின்றனர். அதனைத் தொடர்ந்து த்ரிப்தி திம்ரி கர்ப்பமாக, குழந்தைக்கு தந்தை யார் என்ற கேள்வி எழுகிறது.

Bad Newz: திரை விமர்சனம் | Bad Newz Movie Review


அதனைத் தொடர்ந்து த்ரிப்தி திம்ரி கர்ப்பமாக, குழந்தைக்கு தந்தை யார் என்ற கேள்வி எழுகிறது.

அதன் பின்னர் குழந்தையின் தந்தை இருவரில் யார்? த்ரிப்தி திம்ரி இறுதியில் யாருடன் சேர்ந்தார் என்பதே கலகலப்பான மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்
  

அகில் சத்தாவாக வரும் விக்கி கௌஷல் கலகலப்பான இளைஞராக துள்ளல் நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

No mobile phobia என தனக்கு இருக்கும் ஒரு பிரச்னையை அவர் கூற, அதைவைத்து வரும் காமெடி காட்சிகள் சிரிப்பு வெடியாக அமைகிறது.

த்ரிப்தி திம்ரி செக்சியான ஹீரோயினாக ஆரம்பத்தில் தெரிந்தாலும் இரண்டாம் பாதியில் நடிப்பில் நன்றாகவே ஸ்கோர் செய்கிறார்.

குர்பிர் பண்ணுவாக நடித்திருக்கும் அமி விர்க், தனது அப்பாவித்தனமாக கதாப்பாத்திரத்தை கணக்கச்சிதமாக செய்திருக்கிறார்.

Bad Newz: திரை விமர்சனம் | Bad Newz Movie Review

சீரியசான கதையை காமெடியாக கூறி பாராட்டுகளை பெறுவதில் ஜெயித்திருக்கிறார் இயக்குநர் ஆனந்த் திவாரி.

நேஹா துபியா, ஷீபா சத்தா உள்ளிட்டோர் தங்கள் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர்.

பாடல்கள் கேட்கும் ரகத்தில் இருந்தாலும், அமர் மொஹிலேயின் பின்னணி படத்துடன் ஒன்ற வைக்கிறது.


கிளாப்ஸ்



நகைச்சுவை காட்சிகள்



தொய்வில்லாத திரைக்கதை



நடிகர்களின் நடிப்பு
  

பல்ப்ஸ்



ஒரு சில இடங்களில் லாஜிக் மீறல்கள் (குறை கூறும்படி இல்லை)

மொத்தத்தில் வயதுவந்தோர் ஜாலியாக சென்று பார்க்க Good News ஆக அமைந்துள்ளது இந்த Bad Newz.  

Bad Newz: திரை விமர்சனம் | Bad Newz Movie Review

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments