நடிகை சமந்தா
நடிகை சமந்தா, தனக்கு வரும் தடைகள் அனைத்தையும் உடைத்து கெத்து காட்டி வருகிறார்.
உடல்நலக் குறைவால் கடுமையாக பாதிக்கப்பட்ட சமந்தாவிற்கு அதேநேரம் சோகமாக அமைந்தது அவருக்கு நாக சைத்தன்யாவுடன் ஏற்பட்ட விவாகரத்து.
இரண்டு கஷ்டத்தையும் ஒரே நேரத்தில் அனுபவித்த சமந்தா அதில் அப்படியே துவண்டு போய்விடாமல் தன்னம்பிக்கையோடு போராடி இப்போது மீண்டும் பழைய வேகத்திற்கு வந்துவிட்டார்.
அடுத்தடுத்து படங்கள் கமிட்டாவது, போட்டோ ஷுட் என பிஸியாக இருக்கிறார்.
சம்பளம்
Citadel: Honey Bunny என்பது ஒரு வெப்சீரிஸ், இதன் முதல் பாகத்தில் பிரியங்கா சோப்ரா மற்றும் ரிச்சர்ட் மேடன் ஆகியோர் நடித்திருந்தனர்.
இப்போது அடுத்து Citadel: Honey Bunny தொடரில் நடிகை சமந்தா மற்றும் வருண் தவான் நடித்துள்ளனர். அண்மையில் சிடாமல் டீஸர் வெளியான நிலையில் இந்த வெப் சீரிஸ் நவம்பர் 7ம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.
இதில் நடிப்பதற்காக சமந்தா ரூ. 10 கோடி சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.