விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக பட்டையை கிளப்பி கொண்டிருக்கும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதனுடைய 5வது சீசன் தற்போது நடந்து வருகிறது.
இந்த சீசன் துவங்குவதற்கு முன்பே இந்த நிகழ்ச்சியை எடுத்து நடத்தி வரும் மீடியா மேசன்ஸ் நிறுவனம் விஜய் டிவியிலிருந்து வெளியேறினார்கள். அதனை தொடர்ந்து வெங்கடேஷ் பட் வெளியேறினார். இப்படி தொடர்ந்து முக்கிய நபர்கள் வெளியேறிய நிலையில் குக் வித் கோமாளி 5 துவங்கியது.
CWC-ல் இருந்து வெளியேறிய மணிமேகலை
ஆனால், கடந்த 4 சீசன்களில் இருந்த கலகலப்பு 5வது சீசனில் குறைந்ததாக ரசிகர்கள் பலரும் கூறி வந்தனர். மேலும் நிகழ்ச்சியின் துவக்கத்தில் கோமாளியாக இருந்த நாஞ்சில் விஜயனும் திடீரென குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தற்போது குக் வித் கோமாளியில், கோமாளியாகவும் நம்மை மகிழ வைத்து பின் தொகுப்பாளினியாகவும் சுவாரஸ்யம் குறையாமல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த மணிமேகலையும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார்.
மணிமேகலையின் வெளியேற்றம் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இவர் தான் காரணம்
இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள மணிமேகலை, தன்னுடைய வேளையில் இடையூறு இருந்ததாகவும், அதற்கு காரணம் குக் வித் கோமாளியில் இருந்த போட்டியாளர் ஒருவர் தான் என்றும் கூறியுள்ளார். அந்த போட்டியாளர் பிரபலமான தொகுப்பாளினி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் “இந்த சீசன் முழுவதும் மற்றொரு பெண் தொகுப்பாளர் அதிகமாக ஆதிக்கம் செலுத்தினார். அவர் நிகழ்ச்சியில் குக்காக இருக்க வேண்டியவர், ஆனால் அவர் அதை மறந்துவிட்டு என்னை வேலை செய்ய விடாமல் தொகுப்பாளர் பகுதிகளில் வேண்டுமென்றே அடிக்கடி குறுக்கிட்டார் இடையூறு செய்தார்.
இந்த சீசனில் என் உரிமைகளை கேட்பதும், கவலையை தெரிவிப்பதும் கூட ஒரு குற்றமாகிவிடுகிறது. ஆனால் எனக்கு சரியானது எதுவோ அதற்காக நான் எப்போதும் குரல் கொடுப்பேன், யாரை பற்றியும் நான் கவலைப்படமாட்டேன்.
புகழ், பணம், தொழில், வாய்ப்புகள் அல்லது வேறு எதுவாக இருந்தாலும், பரவாயில்லை. சுயமரியாதை விஷயத்தில் எல்லாமே இரண்டாம் பட்சம்தான். எனவே நான் ‘குக் வித் கோமாளி 5-ல் இருந்து விலக முடிவெடுத்துள்ளேன்.” என மணிமேகலை கூறியுள்ளார்.
ஆனால், நிகழ்ச்சியில் தனக்கு இடையூறாக இருந்த அந்த நபரின் பெயர் மணிமேகலை குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.