குக் வித் கோமாளி 5வது சீசன் நேற்றுடன் முடிவடைந்தது. பைனல் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் டைட்டிலை ஜெயிக்க விதவிதமாக சமைத்து இருந்தனர். இறுதியில் பிரியங்கா டைட்டில் ஜெயித்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் முதலில் கோமாளியாக இருந்து அதன் பின் தொகுப்பாளராக இந்த சீசன் இருந்த மணிமேகலை சில வாரங்களுக்கு முன் பிரியங்கா உடன் ஏற்பட்ட பிரச்சனைக்கு பிறகு வெளியேறிவிட்டார்.
மணிமேகலை பற்றி பேசிய ஒரே நபர்
பைனல் நிகழ்ச்சியில் மணிமேகலை பற்றி ஒரே ஒரு நபர் மட்டுமே பேசி இருக்கிறார். நடுவராக இருக்கும் செஃப் தாமு தான் அது.
மணிமேகலையை தான் மிஸ் செய்வதாக அவர் கூறினார். அதை கேட்டு பிரியங்கா தலையை மட்டும் ஆட்டி ‘ஆம்’ என்பது போல ரியாக்ஷன் கொடுத்தார்.