குக் வித் கோமாளி 5
சிரிக்க மறந்த மக்களை கூட மீண்டும் சிரிக்க வைத்த ஒரு நிகழ்ச்சியாக உள்ளது குக் வித் கோமாளி.
4 சீசன்களுக்கு மக்கள் கொடுத்த வெற்றி இப்போது 5வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது, இதில் எல்லாமே புதியது. தற்போது இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்த மணிமேகலை நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார்.
அவரது வேலையை அதே நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் ஒரு தொகுப்பாளினி கெடுப்பதாக கூறி இரண்டு நாட்களுக்கு முன் பதிவு போட்டார், இதுகுறித்து ஒரு வீடியோவும் வெளியிட்டார்.
அவருக்கு பிரபலங்கள் பலரும் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.
மாகாபா பதில்
பரபரப்பாக பேசப்படும் இந்த பிரச்சனை குறித்து பிரியங்காவுடன் ஏகப்பட்ட நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கியுள்ள மாகாபாவிடம் கேட்கப்பட்டுள்ளது.
அதற்கு அவர், நான் அந்த நிகழ்ச்சியிலேயே இல்லை, நான் அங்கு இருந்தால் யார் சரி, யார் தவறு என்று சொல்லுவேன், அது அவங்களுடைய கருத்து.
காட்டு வழியா போறோம், அங்க 2 யானை சண்டை போடுது, போய் சமாதானமா செய்ய முடியும், நம்மள நசுக்கிப் போட்டுட்டு அது பாட்டுக்குப் போயிடும்.
இதனால் தூர இருந்து வேடிக்கை பார்க்கிறது நல்லது, அது நாட்டுக்கு ரொம்ப முக்கியமான விஷயமும் கிடையாது என கூறியுள்ளார்.