குக் வித் கோமாளி
குக் வித் கோமாளி சமையலில் ஆர்வம் இல்லாதவர்கள் கூட ஆர்வமாக பார்த்து ரசித்த ஒரு ஷோ.
என்ன தான் கோமாளிகள் சரியாக சமைக்காமல் இடையூறுகள் செய்தாலும் போட்டியாளர்கள் எப்படியோ சமைத்து விடுவார்கள். 4 சீசன் வெற்றிக்கு பிறகு இப்போது 5வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது, தற்போது இதுவும் முடிவுக்கு வந்துள்ளது.
இறுதி நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நடந்து முடிந்துவிட்டாலும் இன்னும் ஒளிபரப்பாகவில்லை.
வெங்கடேஷ் பட்
4 சீசன்களிலும் ரசிகர்களின் பேவரெட் நடுவராக இருந்தவர் வெங்கடேஷ் பட், இவர் இப்போது வேறொரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார். அண்மையில் இவரை குக் வித் கோமாளி புகழ் குரேஷி பேட்டி எடுத்தார்.
அப்போது வெங்கடேஷ் பட் மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் இருவரையும் பேச வைத்தார்.
அப்போது வெங்கடேஷ் பட், நான் இன்ஸ்டாகிராமில் உங்களுக்கு மெசேஜ் செய்து Friend Request செய்திருந்தேன், நீங்கள் அக்சப்ட் பண்ணவே இல்லை என சொல்ல அதற்கு ரங்கராஜ் நான் அதை பார்க்கவில்லை சார்.
என் டீம் தான் ஹேண்டில் பண்ணிட்டு இருக்காங்க, ரொம்ப சாரி என்று சொல்கிறார். அதற்கு வெங்கடேஷ் பட் பரவாயில்லை என கூறி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.