Monday, March 17, 2025
HomeசினிமாDominic and the Ladies' Purse திரை விமர்சனம்

Dominic and the Ladies’ Purse திரை விமர்சனம்


கௌதம் மேனன் தமிழ் சினிமாவில் சிறந்த படங்களை கொடுத்திருந்தாலும், கடந்த சில வருடங்களாக இவர் படங்கள் ரசிகர்களை பெரிதாக கவராமல் போக, தற்போது மலையாள சினிமாவில் மம்முட்டியுடன் கைக்கோர்க்க, இதில் கௌதம் மீண்டாரா, பார்ப்போம்.

 

கதைக்களம்

மம்முட்டி

போலிஸ் வேலையில் மிக நேர்மையாக இருக்க, அவரின் நேர்மை வேலைக்கு செட் ஆகாததால், வேலையை ரிசைன் செய்துவிட்டு ப்ரைவைட் டிடெக்டிவ் வேலை பார்த்து வருகிறார்.


தனக்கு ஒரு அசிஸ்டண்ட் கிடைக்கும் சின்ன சின்ன வேலைகளை அவர் செய்து வர, ஒரு நாள் மம்மூட்டி வீட்டு ஓனர் ஒரு பெண்ணின் பர்ஸை நீ அவரிடம் ஒப்படைக்க வேண்டும், அப்படி ஒப்படைத்தால் வாடகை பாக்கி தர தேவையில்லை என்கிறார்.

Dominic and the Ladies



அவரும் அந்த பர்ஸ் பூஜா என்பவரின் பர்ஸ் என கண்டுபிடுத்த்ய் கொடுக்க செல்ல, அங்கு பூஜா 4 நாட்களாக தொலைந்துள்ளார் என்பது தெரிய வருகிறது.


பிறகு அந்த பெண்ணை தேடி மம்முட்டி செல்ல, பூஜாவிற்கு என்ன ஆனது, அவரை மம்முடி கண்டுப்பிடித்தாரா என்பதே மீதிக்கதை. 

Dominic and the Ladies

படத்தை பற்றிய அலசல்



மம்முட்டி இந்த மாதிரி கதைக்களம் எல்லாம் அவருக்கு அல்வா சாப்பிடுவது போல். டிடெக்டிவ் ஆக அவரை பல டஜன் படங்களில் பார்த்திருந்தாலும், டோம்னிக் ஆக இதில் மீண்டும் ஒரு சிக்ஸர் அடித்துள்ளார்.



அத்தனை யதார்த்தமாக ஒவ்வொரு காட்சியிலும் அசத்தியுள்ளார், சிம்பிள் விஷயம் தான் பெரிதாக க்ளிக் ஆகும் என தன் சிஷ்யன் கோகுல் சுரேஷுக்கு அறிவுரை சொல்வதிலிருந்து, கான்சண்ட்ரேஷன், அப்சர்வேஷன் எவ்வளவு முக்கியம் என்பதை ஒரு வாட்ச் வைத்து சொல்லுமிடமெல்லாம் மம்முக்கா பின்னி பெடல்.

Dominic and the Ladies

படம் ஒரு பெண் பர்ஸில் தொடங்கி, பெண் மிஸ்ஸிங், அதை தொடர்ந்து அந்த காதலன் மிஸ்ஸிங் என பல கிளைகளாக விரிந்து சுவாரஸ்யமாக நகர்கிறது.

அத்தனை சுவாரஸ்யமும் இரண்டாம் பாதியில் அட எதை நோக்கி தான்பா போறீங்க என்று நினைக்க வைத்தாலும், கிளைமேக்ஸ் டுவிஸ்ட் சீட் எட்ஜ் வர வைக்கிறது.

Dominic and the Ladies


இந்த மாதிரி டுவிட்ஸ்ட் ஒரு சில படங்களில் நாம் பார்த்திருந்தாலும்,
திரைக்கதை நம்மை அந்த பக்கம் கொண்டு செல்லாமல், வேறு திசைக்கு கொண்டு சென்று கிளைமேக்ஸ் இப்படி கொண்டு வந்தது கௌதம் கலக்கிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.


படத்தின் ஒளிப்பதிவு கௌதம் படங்களுக்கே உள்ள செம க்ளாஸ், பின்னணி இசை முந்தைய கௌதம் பட அளவுக்கு இல்லை. ஓகே ரகம் தான். 

Dominic and the Ladies

க்ளாப்ஸ்


  • மம்முட்டி, கோகுல் சுரேஷ் காம்போ ரசிக்க வைக்கிறது.

  • கிளைமேக்ஸ் டுவிஸ்ட்

பல்ப்ஸ்



  • கொஞ்சம் மெதுவாகவே செல்லும் திரைக்கதை.

மொத்தத்தில் Dominic and the Ladies’ Purse டிடெக்டிவ் பட விரும்பிகளுக்கு செம விருந்து. 

Dominic and the Ladies

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments