G.O.A.T
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் அடுத்த வாரம் வெளியாக உள்ள திரைப்படம் G.O.A.T. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளனர். மேலும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அதனால் இந்த படத்தின் மேல் ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் படக்குழுவினர் என அனைவரும் இந்த படத்தை பற்றி பேட்டிகளில் பேசி வருகின்றனர்.
சுவாரசியமான தகவல்
இந்த நிலையில், வெங்கட் பிரபுவுடன் நடிகர் வைபவ் பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில், இந்த படம் மாபெரும் வெற்றி பெரும் என நடிகர் விஜய் தன்னிடம் கூறியதாகவும், ஒரு நாள் ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னை அழைத்து நீங்கள் அனைவரும் வெங்கட் பிரபுவுடன் எத்தனை காலம் பழக்கம் என கேட்டதாகவும் அதற்கு நான் சிறு வயதில் இருந்து நாங்கள் அனைவரும் நண்பர்கள் என்று கூறியதாகவும் சொன்னார்.
மேலும், விஜய் என்னிடம் இந்த படத்தை வெங்கட் பிரபு மிகச் சிறப்பாக இயக்கி கொண்டு வருகிறார் எனவும் ஆனால் வெங்கட் எந்த வித டென்ஷனும் இல்லாமல் கூலாக இருப்பதாகவும் கூறினார். அதற்கு நான் அது தான் வெங்கட்டின் யுத்தி என்று கூறினேன் என அந்த பேட்டியில் விஜய் பற்றி வைபவ் பேசியுள்ளார்.