GOAT
இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் விஜய் கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் GOAT. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 5ஆம் தேதி வெளிவரும் இப்படத்தை திரையரங்கில் காண ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
சமீபத்தில் GOAT படத்தை பார்த்துவிட்டு நடிகர் விஜய், இயக்குனர் வெங்கட் பிரபுவை பாராட்டியதற்காக சொல்லப்படுகிறது. பாடல்கள் பெரிதளவில் ரசிகர்களை கவரவில்லை என்றாலும், படத்தின் மீது படக்குழு மாபெரும் நம்பிக்கை வெய்துள்ளார்களாம்.
படத்தின் கதை
இந்த நிலையில், GOAT படத்தின் 2 கதைச்சுருக்கம் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, 2004ல் மாஸ்க்கோவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை மையமாக கொண்டு இப்படத்தின் கதைக்களம் உருவாகி இருக்கிறது என சொல்லப்படுகிறது.
அதன்படி, GOAT படத்திலும் மிகப்பெரிய குண்டுவெடிப்பு சம்பவத்தை அரங்கேற்ற ஒரு கதாபாத்திரம் நியமிக்கப்படுகிறது. இதை கதாநாயகன் விஜய் எப்படி தடுத்து நிறுத்திக்கிறார்? அந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை அரங்கேற்ற வந்தவர் யார்? இதன்பின் யார்யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பது தான் படத்தின் கதை என தகவல் வெளியாகியுள்ளது.ஆனால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்றும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.