GOAT
தளபதி விஜய் அரசியலில் களமிறங்கியுள்ள நிலையில், அவருடைய கடைசி இரண்டு படங்களாக GOAT மற்றும் தளபதி 69 அமைந்துள்ளது.
இதில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள GOAT திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. எஜிஎஸ் கல்பாத்தி எஸ் அகோரம் தயாரித்துள்ள இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
இப்படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு அனைவரும் ஈடுபட்டு வருகிறார்கள். படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர்கள் தொடர்ந்து பேட்டி கொடுத்து வரும் நிலையில், GOATல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் அரவிந்த் ஆகாஷ் அளித்த பேட்டியில் படத்தின் கிளைமாக்ஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
கிளைமாக்ஸ் காட்சி
இதில் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தோனி வருகிறாரா என கேள்வி கேட்கப்பட்ட நிலையில், “திரையில் தோனி வருவார்” என பதிலளித்துள்ளார். இதன்மூலம் கண்டிப்பாக GOAT திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி தெறிக்க போகிறது என்று உறுதியாக தெரிகிறது.
மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் திரிஷா இருவரும் கேமியோவாக வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.