விஜய்யின் கோட்
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் நேற்று வெளிவந்த படம் GOAT.
இந்த படத்தில் பல முன்னணி நட்சத்திரங்களான பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, மோகன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் தற்போது வரை கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
ஆனால், முதல் நாளிலே உலகளவில் இந்த படம் ரூ. 126 கோடி வரை வசூல் செய்துள்ளது என அதிகாரப்பூர்வ தகவல் வந்துள்ளது.
சினேகா
இந்த நிலையில், GOAT படத்தின் வெற்றியை முன்னிட்டு விஜய்க்கு ஜோடியாக அந்த படத்தில் நடித்த சினேகா ஈசிஆர்-ல் உள்ள விஜயா திரையரங்கில் ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
மேலும், படத்திற்கு வந்த ரசிகர்கள் அனைவருக்கும் மரக்கன்றை பரிசாக அளித்தார். தற்போது, இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.