GOAT
தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் GOAT. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் கல்பாத்தி எஸ். அகோரம் தயாரித்துள்ளார். யுவன் இசையமைத்துள்ளார்.
பிரஷாந்த், பிரபு தேவா, லைலா, சினேகா, மீனாட்சி, மோகன், ஜெயராம், யோகி பாபு என பலரும் நடித்துள்ள இப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி வெளிவருகிறது. தமிழ்நாட்டில் மட்டுமே கிட்டதட்ட 1000 ஸ்க்ரீன்களில் இப்படம் வெளிவருவதாக தகவல் தெரிவிகின்றனர்.
இப்படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு தொடர்ந்து நேர்காணலில் படம் குறித்து பேசி வருகிறார்.
GOAT படத்திற்கு வைக்கபட்ட முதல் தலைப்பு
அதில் ஒரு பேட்டியில் GOAT படத்திற்கு முதலில் வைத்திருந்த தலைப்பு ‘காந்தி’, அந்த தலைப்பு கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக வேறு எந்த தலைப்பு வைத்தால் சரியாக இருக்கும் என்று என்னிபொழுது Greatest of all time என்று வைக்கலாம் என தோன்றியது. அப்படி தான் இப்படத்திற்கு தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டது என வெங்கட் பிரபு கூறியுள்ளார்.
மேலும் இன்று GOAT படத்திலிருந்து நான்காவது பாடல் வெளிவரவுள்ளது. இந்த பாடலில் தான் விஜய் மற்றும் திரிஷா இணைந்து நடனமாடியுள்ளார்கள் என்றும் சொல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.