திரிஷா – GOAT
நடிகை திரிஷா தளபதி விஜய்யின் GOAT திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார் என படம் வெளிவருவதற்கு முன்பே தகவல் பரவ துவங்கிவிட்டது.
அதுவும் ‘மட்ட’ எனும் பாடலில் தான் விஜய்யுடன் இணைந்து திரிஷா நடனமாடியுள்ளார் என கூறப்பட்டது. ஆனால், அந்த லிரிகள் பாடலில் திரிஷாவை தவிர்த்துவிட்டு வெளியிட்டனர். இப்படியிருக்க மட்ட பாடலில் திரிஷாவின் என்ட்ரி திரையரங்கேயே அதிர வைத்தது.
குறிப்பாக கில்லி படத்தில் வரும் நடனத்தை விஜய்யும், திரிஷா இணைந்து ஆடியதை எல்லாம் ரசிகர்கள் கொண்டாடினார்கள். இந்த நிலையில், ஒரே ஒரு பாடலுக்கு நடனமாட நடிகை திரிஷா வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
திரிஷா சம்பளம்
அதன்படி, GOAT திரைப்படத்தில் இடம்பெற்ற மட்ட பாடலில் விஜய்யுடன் இணைந்து நடனமாடிய திரிஷா ரூ. 5 கோடி சம்பளம் பெற்றதாக சொல்லப்படுகிறது.
ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க ரூ. 10 முதல் ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படும் நடிகை திரிஷா ஒரே ஒரு பாடலுக்கு நடனமாட ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளாராம்.
ஆனால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.