GOAT
தளபதி விஜய் – இயக்குனர் வெங்கட் பிரபு இருவரும் முதல் முறையாக கைகோர்த்துள்ள திரைப்படம் GOAT. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சினேகா, லைலா, பிரஷாந்த், பிரபு தேவா, மோகன் என பலரும் நடித்துள்ளனர்.
சமீபத்தில் வெளிவந்த ட்ரைலர் மக்கள் மத்தியில் படத்திற்கு மாபெரும் வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. மேலும் நாளை GOAT படத்திலிருந்து நான்காவது பாடலும் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு நமது சினிஉலகம் youtube சேனலுக்கு எக்ஸ்க்ளுசிவாக பேட்டி கொடுத்துள்ளார். இதில் GOAT படம் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களையும் பகிர்ந்துகொண்டார்.
வெங்கட் பிரபு பேட்டி
அதில் “GOAT படம் ரஜினிகாந்தின் சிவாஜி படம் போல் இருக்கும். பாடல்கள், நகைச்சுவை, கொண்டாட்டம், குடும்பத்துடன் கனெக்ட் ஆகும் எமோஷன் என அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடித்த படம் சிவாஜி. அதே போல் இருக்கக்கூடிய, இந்த தலைமுறைக்கான படமாக GOAT இருக்கும்” என வெங்கட் பிரபு கூறியுள்ளார்.
மேலும் GOAT படம் குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு பேசியதை தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் இந்த Interview-வை பாருங்க..