நடிகை சினேகா விஜய்க்கு ஜோடியாக 20 வருடங்களுக்கு முன் வசீகர என்ற படத்தில் நடித்து இருந்தார். அந்த படத்தில் அவர்களது கெமிஸ்ட்ரிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதற்கு பிறகு தற்போது விஜய் நடிக்கும் GOAT படத்தில் சினேகா நடித்து வருகிறார். அதில் ஹீரோயினாக இளம் நடிகை மீனாட்சி சவுத்ரி நடிப்பதால் சினேகாவுக்கு என்ன ரோல் என எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
நடிகை விளக்கம்
இந்நிலையில் சினேகா அளித்த பேட்டியில் தான் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக தான் நடிக்கிறேன் என கூறி இருக்கிறார்.
மேலும் அவர் தனக்கு இந்த படத்தில் விஜய் உடன் தனக்கு காம்பினேஷன் காட்சிகள் அதிகம் இருக்கும் என்றும் கூறி இருக்கிறார்.