Tuesday, March 18, 2025
HomeசினிமாGOAT பட நடிகை மீனாட்சி சவுத்ரி குறித்து பரவிய தகவல்.. எச்சரித்த அரசு

GOAT பட நடிகை மீனாட்சி சவுத்ரி குறித்து பரவிய தகவல்.. எச்சரித்த அரசு


 மீனாட்சி சவுத்ரி

மிஸ் இந்தியா டைட்டில் ஜெயித்து அதன் பின் தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கியவர் மீனாட்சி சவுத்ரி. 

விஜய் ஜோடியாக GOAT படத்தில் நடித்து அதன் மூலம் பிரபலமானார். அதை தொடர்ந்து, துல்கர் சல்மானுடன் இணைந்து லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

இந்த படத்தில் மீனாட்சி சவுத்ரி, துல்கர் சல்மானுடன் இணைந்து ராம்கி ஆகியோர் நடித்திருந்தனர். படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்து வசூலில் சாதனை படைத்தது.

இவ்வாறு முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை மீனாட்சி சவுத்ரியை ஆந்திரப் பிரதேச அரசு பிராண்ட் அம்பாசிடராக நியமித்ததாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

எச்சரித்த அரசு 

இந்நிலையில், வெளியான செய்திகள் குறித்து ஆந்திர அரசு மறுத்துள்ளது. அரசின் பெயரில் வேண்டுமென்றே இதுபோன்ற பொய்யான பதிவுகளை வெளியிடுவோர் மீதும், பொய்யான பிரசாரம் செய்பவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.  

GOAT பட நடிகை மீனாட்சி சவுத்ரி குறித்து பரவிய தகவல்.. எச்சரித்த அரசு | Information About Actress Is Fake

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments