GOAT
தளபதி விஜய் – இயக்குனர் வெங்கட் பிரபு கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் GOAT. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் கல்பாத்தி எஸ் அகோரம் தயாரித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
பிரமாண்டமாக தயாராகி இருக்கும் இப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி உலகமெங்கும் வெளிவரவுள்ளது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, மீனாட்சி, மோகன், ஜெயராம் என பலரும் நடித்துள்ளனர்.
[2G1OIZ
]
மக்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் ப்ரீ புக்கிங் தற்போது உலகம் முழுவதும் துவங்கியுள்ளது. இந்த நிலையில் இதுவரை GOAT திரைப்படம் உலகளவில் செய்துள்ள ப்ரீ புக்கிங்கில் செய்துள்ள வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது.
ப்ரீ புக்கிங்
அதன்படி, GOAT திரைப்படம் உலகளவில் ப்ரீ புக்கிங்கில் இதுவரை ரூ. 15 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என சொல்லப்படுகிறது. ரிலீஸுக்கு முன் கண்டிப்பாக ப்ரீ புக்கிங்கிலேயே இப்படம் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நம்முடைய சினிஉலகம் Youtube சேனலுக்கு இயக்குனர் வெங்கட் பிரபு எக்ஸ்க்ளுசிவ் கொடுத்துள்ள பேட்டியை இங்கு காணலாம்.