நடிகர் பிரஷாந்த்
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் டாப் ஸ்டார் என கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் பிரஷாந்த். இவர் நீண்ட காலம் கழித்து ஹீரோவாக நடித்து வெளிவந்த அந்தகன் திரைப்படம் சமீபத்தில் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
இதை தொடர்ந்து தளபதி விஜய்யுடன் பிரஷாந்த் இணைந்து நடித்திருந்த GOAT திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கிட்டதட்ட இதுவரை உலகளவில் இப்படம் ரூ. 292 கோடி வரை வசூல் செய்துள்ளது.
புதிய கூட்டணி
இந்த நிலையில் GOAT வெற்றியை தொடர்ந்து பிரஷாந்த் அடுத்ததாக நடிக்கப்போகும் படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சூர்யாவின் 44வது படத்தில் பிரஷாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப்போகிறாராம்.
இதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.
கார்த்தி சுப்ராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.
மேலும் நடிகை ஸ்ரேயா இப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார் என தகவல் வெளிவந்த நிலையில், தற்போது பிரஷாந்தும் இந்த கூட்டணியில் இணைய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
You May Like This Video