விஜய்யை வைத்து வெங்கட் பிரபு இயக்கி இருக்கும் கோட் படம் நல்ல வசூலை குவித்து வருகிறது. ஐந்தாவது நாளில் 300 கோடி என்ற மைல்கல்லை கடந்து இருக்கிறது படம்.
இயக்குனர் வெங்கட் பிரபு இந்த மகிழ்ச்சியில் ஒரு விஷயத்தை செய்து இருக்கிறார்.
புது கார்
வெங்கட் பிரபு புது Range Rover காரை வாங்கி இருக்கிறாராம். அந்த காரின் விலை 86 லட்சம் ரூபாய் என தகவல் வெளியாகி இருக்கிறது.
வழக்கமாக படம் ஹிட் ஆனால் தயாரிப்பு நிறுவனம் தான் இயக்குனருக்கு கார் கிப்ட் கொடுக்கும், இப்படி ஒரு ட்ரெண்ட் தமிழ் சினிமாவில் இருக்கிறது. ஆனால் வெங்கட் பிரபு தனது சொந்த சம்பளத்தில் இருந்து அந்த காரை வாங்கி இருக்கிறாராம்.