GOAT
வெங்கட் பிரபு இயக்கத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் கடந்த வாரம் வெளியான படம் GOAT. இப்படம் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் 90ஸ் முன்னணி நட்சத்திரங்களான பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இரட்டை வேடத்தில் ஹீரோ மற்றும் வில்லன் என இரு வேறு கதாபாத்திரத்தில் விஜய் நடித்த இந்த படம் வெளிவந்து வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
வசூல்
இந்த நிலையில், மொத்தமாக ஸ்ரீலங்காவில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, GOAT திரைப்படம் வெளிவந்து 5 நாட்களை கடந்துள்ள நிலையில் இதுவரை இலங்கையில் ரூ. 17 கோடி வரை வசூல் செய்துள்ளது என கூறப்படுகிறது.
இந்திய மதிப்புக்கு ரூ. 4.74 கோடி என்பது குறிப்பிடத்தாது.
இனி வரும் நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் எவ்வளவு வசூல் செய்து சாதனை படைக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.