GOAT
தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் GOAT. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபு தேவா, பிரஷாந்த், மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதுவரை இப்படத்திலிருந்து மூன்று பாடல்கள் வெளிவந்துள்ள நிலையில், கடைசியாக வெளிவந்த ஸ்பார்க் பாடல் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளது.
படத்தின் கதை
GOAT படத்தின் கதை இதுதான், இல்லை இல்லை அதுதான் என பலவிதமான வதந்திகள் தொடர்ந்து இணையத்தில் பரவி வந்தது. இதுகுறித்து இயக்குனர் வெங்கட் பிரபுவே பேசியுள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்துள்ள இயக்குனர் வெங்கட் பிரபு, GOAT படத்தின் கதைக்கரு குறித்து பேசியுள்ளார்.
இதில் “SATSனு பெயர். SPECIAL ANTI TERRORIST SQUADனு சொல்வார்கள். RAW அமைப்போட இணைஞ்சு வேலை செய்கிற குரூப். அதில் ஒரு சமயத்துல சிறப்பாக வேலை செய்தவங்க சிலர். அவர்கள் ஒரு காலத்தில் செய்த விஷயம், இப்போ ஒரு பிரச்னையாக வந்து அவங்க முன்னாடி நிற்கிறது. அதை எப்படி எதிர்கொண்டு வெல்கிறார்கள் என்பது மையக்கரு” என படத்தின் கதை பற்றி கூறியுள்ளார்.