GOAT
2024ஆம் ஆண்டு அதிக எதிர்பார்ப்பில் இருக்கக்கூடிய திரைப்படங்களில் ஒன்று GOAT. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ளனர்.
தளபதி விஜய் இப்படத்தில் மூன்று வேடங்களில் நடித்துள்ளார் என சொல்லப்படுகிறது. மேலும் இப்படத்திற்காக டீ ஏஜிங் வேலைகள் நடந்துள்ளன.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரபு தேவா, பிரஷாந்த், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். சமீபத்தில் தான் இப்படத்தின் இரண்டாவது பாடல் வெளிவந்தது.
தமிழக உரிமை
நேற்று இப்படத்தின் திரையரங்க உரிமைகளை கைப்பற்றிய நிறுவனங்கள் குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பதிவுகளை வெளியிட்டு இருந்தார். இதில் தமிழக திரையரங்க உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் கைப்பற்றியுள்ளதாக அறிவித்தனர்.
இந்த நிலையில், தமிழக திரையரங்க உரிமையை கைப்பற்றிய ரோமியோ பிக்சர்ஸ் இப்படத்தை ரூ. 70.5 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.