GOAT
தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் GOAT. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, ஏஜிஎஸ் நிறுவனம் ரூ. 300 கோடி செலவு செய்து இப்படத்தை தயாரித்துள்ளது.
பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, மோகன், லைலா, மீனாட்சி, ஜெயராம் என பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். மேலும் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இடையமைத்துள்ளார்.
ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த விஷயம் GOAT படத்தின் இசை வெளியிட்டு விழா. ஆனால், இது நடக்காத என சொல்லப்படுகிறது. மேலும் GOAT படத்தின் ட்ரைலர் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பும் வெளியாகுமாம்.
வசூல் வேட்டை
இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்கங்களிலும் GOAT படம் வெளிவரவுள்ளது என தெரியவந்துள்ளது. இதற்குமுன் அஜித்தின் வலிமை படம் தான் தமிழ்நாட்டில் அனைத்து திரையரங்கிலும் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் தமிழ்நாட்டில் மட்டுமே GOAT படத்தின் வசூல் முதல் நாள் மாபெரும் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.