யுவன் ஷங்கர் ராஜா
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் ஷங்கர் ராஜா. இவர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பயணித்து வருகிறார்.
இசைஞானி இளையராஜாவின் மகனான இவர் தனக்கென்று தனி இடத்தையும் தமிழ் சினிமாவில் சம்மதித்துள்ளார். இவர் இசையில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தளபதி விஜய்யின் GOAT.
புதிய கீதை திரைப்படத்திற்கு பின் யுவன் இசையில் விஜய் நடிக்கும் திரைப்படம் இதுவே ஆகும். பல ஆண்டுகள் கழித்து இவர்கள் இருவரும் இப்படத்தில் இணைந்ததால், GOAT படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்திருந்தனர்.
படத்திற்கு முன் வெளிவந்த பாடல்கள் மீது சற்று விமர்சனங்கள் இருந்தாலும், திரையரங்கில் யுவனுடைய பாடல்களையும், பின்னணி இசையையும் ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
சம்பளம்
இந்த நிலையில் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் GOAT படத்திற்கு இசையமைக்க யுவன் ஷங்கர் ராஜா வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்காக ரூ. 2 கோடி சம்பளமாக வாங்கினாராம் யுவன்.