நடிகர் விஜய் நடித்து வரும் GOAT படத்தினை பற்றியும் பல தகவல்கள் தற்போது வெளிவர தொடங்கி இருக்கிறது. படத்தில் விஜய்யும் விஜய்யும் மோதும் காட்சி ஒன்று இருக்கிறது என தகவல் வெளியானது.
படத்தில் முக்கிய காட்சியாக அது இருக்கும் என கூறப்படுகிறது. அதே போல மறைந்த நடிகர் விஜயகாந்த்தை AI தொழில்நுட்பம் மூலமாக மீண்டும் திரையில் கொண்டு வர இருக்கின்றனர்.
அதை விஜயகாந்தின் மனைவி பிரேமலதா ஏற்கனவே பேட்டியில் உறுதிப்படுத்திவிட்டார்.
இவ்வளவு நேரம் வருமா
இந்நிலையில் தற்போது விஜயகாந்த் GOAT படத்தில் எவ்வளவு நேரம் வருவார் என்கிற தகவலை மகன் விஜய பிரபாகரன் கூறி இருக்கிறார்.
படத்தில் ஒரு நிமிடம் மட்டுமே விஜயகாந்த் காட்சி வருகிறதாம்.
நடிகர் விஜய் ஆரம்பகால கேரியரில் தன்னுடன் நடிக்க வைத்து உதவி செய்தவர் விஜயகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்ஏசி முன்னணி இயக்குனராக விஜயகாந்த்தை வைத்து பல படங்கள் இயக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.