GOAT
2024ஆம் ஆண்டில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் முக்கியமான ஒன்று GOAT. இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ளார்.
ஏஜிஎஸ் நிறுவனம் கல்பாத்தி எஸ் அகோரம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, மீனாட்சி, லைலா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
படம் இன்னும் 2 நாட்களில் வெளிவரவுள்ள நிலையில், ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா, பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்டோர் இண்டர்வியூ கொடுத்து வருகிறார்கள்.
விஜய் சொன்ன வார்த்தை
படம் குறித்து பாசிட்டிவான விமர்சனங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், படத்தின் யுவனின் பின்னணி இசை குறித்து முதல் முறையாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தை பார்த்த தளபதி விஜய், GOAT படத்தில் யுவன் மின்னிட்டான்யா என வெங்கட் பிரபுவிடம் கூறினாராம்.
இதுவரை வெளிவந்த பாடல்களில் சில விமர்சனங்கள் ரசிகர்கள் மத்தியில் இருந்த நிலையில், தற்போது தளபதி விஜய் யுவனின் பின்னணி இசை சிறப்பாக இருக்கிறது என வெங்கட் பிரபுவிடம் கூறியுள்ளது, படத்திற்கு மேலும் பாசிட்டிவாக அமைந்துள்ளது.