விஜய்யின் GOAT படத்தை திரையில் பார்க்கத்தான் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் தற்போது வெயிட்டிங். விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் படம் எப்படி இருக்க போகிறது என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
படத்தின் ரன்டைம் 3 மணி நேரம் 3 நிமிடங்கள் மற்றும் 14 நொடிகள் என தகவல் வந்திருப்பதால், ‘இவ்வளவு நீளமா’ என பலரும் பேச தொடங்கி இருக்கின்றனர்.
முதல் விமர்சனம்
GOAT முழு படத்தையும் பார்த்த சென்சார் போர்டு உறுப்பினர்கள் அளித்த விமர்சனம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.
3 மணி நேரம் என்றாலும், படம் போனதே தெரியவில்லை என பாசிட்டிவ் ஆக தான் அவர்கள் விமர்சித்து இருக்கிறார்களாம்.