சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடித்து இருக்கும் அமரன் படம் இன்று ரிலீஸ் ஆகி இருக்கும் நிலையில் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகள் எமோஷ்னலாக இருப்பதாக படம் பார்த்தவர்கள் கூறி இருக்கின்றனர்.
GOAT, வேட்டையன் படங்களை முந்திய அமரன்
இந்நிலையில் வேட்டையன், GOAT ஆகிய படங்களை தற்போது அமரன் பின்னுக்கு தள்ளி இருக்கிறது.
Bookmyshow தளத்தில் ஒரு மனை நேரத்தில் எத்தனை டிக்கெட்டுகள் புக் ஆனது என்ற புள்ளிவிவரத்தில் தான் அமரன் இந்த சாதனை செய்திருக்கிறது.
- Amaran: 32.57k
- TheGoat: 32.16k
- Vettaiyan: 31.86k
-
Indian2: 25.78k - Raayan: 19.22k
(Highest tickets sold in 1 hour on BookMyShow)