நடிகை சுஜிதா
பாண்டியன் ஸ்டோர்ஸ் தமிழ் சின்னத்திரை ரசிகர்களால் மறக்கவே முடியாத ஒரு தொடர்.
விஜய் தொலைக்காட்சியில் 5 வருடங்களுக்கு செம ஹிட்டாக ஒளிபரப்பாகிய இந்த தொடர் முடிந்து இப்போது 2ம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
முதல் சீசனில் பாசமுள்ள அண்ணியாக நடித்து மக்களின் மனதை வென்றவர் சுஜிதா.
இவர் தொடர்களில் நடிப்பதை தாண்டி போட்டோ ஷுட் நடத்துவது, தனது யூடியூபில் வீடியோக்கள் பதிவிடுவது, சமையல் நிகழ்ச்சியில் பங்குபெறுவது என பிஸியாக இருக்கிறார்.
நடிகையின் விளக்கம்
நடிகை சுஜிதா அண்மையில் தனது யூடியூப் பக்கத்தில் ஹோம் டூர் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார், அதனால் பிரச்சனை எழுந்துள்ளது. வீட்டில் துப்பாக்கி இருப்பதை வீடியோவில் காணப்பட்டதால் தான் பிரச்சனையே.
இதுகுறித்து நடிகை சுஜிதா ஒரு பேட்டியில், நீலகிரி சுற்றுலா சென்றபோது நண்பர் வீடு மருதமலை அடிவாரத்தில் உள்ளது. அவரது வீட்டிற்கு சென்றபோது வீடு அழகாக இருந்ததால் ஹோம் டூர் வீடியோ போடலாமா என கேட்டேன், அவரும் ஒப்புக்கொண்டார்.
அந்த வீட்டில் இரண்டு ‘ஏர் ரைபிள்’ துப்பாக்கிகளை அவர் காட்டியிருந்தார். அவற்றை வீட்டில் வைத்திருக்க லைசன்ஸ் தேவை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார், இதுதான் நடந்தது.
சட்டத்துக்கு விரோதமா எந்த விஷயமும் அவங்க செய்யல, இந்த செய்தியை கேள்விப்பட்டு என் நண்பர், எதுக்கு இப்படியெல்லாம் யோசிக்கிறாங்க என்று சொல்லி சிரித்தார். வீடியோ வந்ததில் இருந்து பலரும் பல கருத்துக்களை கிளப்பி விடுகிறார்கள்.
ஆனா, வனத்துறையில் இருந்து எங்களை எந்த ஒரு கேள்வியும் கேட்கவில்லை. அதனால் இவையெல்லாம் தேவையில்லாத வேலை என்று சுஜிதா குறிப்பிட்டுள்ளார்.