சஞ்சய் தத்
பாலிவுட் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நாயகனாக வலம் வந்தவர் சஞ்சய் தத்.
சுமார் 40 ஆண்டுகளாக 135 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர் ஹிந்தியை தாண்டி தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
யஷ் நடித்து மிகப்பெரிய வெற்றியடைந்த KGF 2, விஜய்யின் லியோ போன்ற பிளாக் பஸ்டர் படங்களில் நடித்தார்.
சொத்து மதிப்பு
இவரது சொத்து மதிப்பு மொத்தமாக ரூ. 295 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. ஒரு படத்திற்கு ரூ. 8 கோடி முதல் ரூ. 15 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என்கின்றனர்.
படங்கள், விளம்பரங்கள் தாண்டி பல வணிகங்களிலும் முதலீடு செய்துள்ளார்.
மானயதா என்பவரை திருமணம் செய்த சஞ்சய் தத்திற்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மும்பையின் பாந்த்ராவில் உள்ள பாலி ஹில்ஸில் ரூ. 40 கோடி மதிப்புள்ள ஒரு ஆடம்பர பங்களா உள்ளது.
துபாயிலும் இவருக்கு ஒரு ஆடம்பர வீடும் உள்ளது. அதேபோல் பல கோடி மதிப்புள்ள கார்கள் மற்றும் வாட்ச்களை இவர் அதிகம் வாங்கி குவித்துள்ளாராம்.