Wednesday, January 22, 2025
Homeவிளையாட்டுLionel Messi: நெய்மர் கூட்டணி சாத்தியமா ?ஓய்வு பெறப்போவது எப்போது ? ஓபனாக பேசிய லியோனல்...

Lionel Messi: நெய்மர் கூட்டணி சாத்தியமா ?ஓய்வு பெறப்போவது எப்போது ? ஓபனாக பேசிய லியோனல் மெஸ்ஸி..! – lionel messi about his retirement and joining with neymar again


அர்ஜன்டினா நாட்டை சேர்ந்த கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி உலகத்தரத்தில் முன்னணி கால்பந்து நட்சத்திரமாக ஜொலித்து வருகின்றார். 36 வயதாகும் மெஸ்ஸி இதுவரை பல சாதனைகளை படைத்துள்ளார். கிளப் தொடர்களாக இருந்தாலும் சரி, நேஷனல் டீமிற்காக விளையாடினாலும் சரி அனைத்திலும் தன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி வருகின்றார் மெஸ்ஸி.
இந்நிலையில் 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதை பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார் மெஸ்ஸி. அவர் கூறியதாவது, 2026 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து முடிவெடுப்பதற்கு முன், உடல் ரீதியாக எப்படி உணர்கிறேன் என்பதைப் பார்க்கவேண்டும் என லியோனல் மெஸ்ஸி கூறுகிறார்.

கைலியன் எம்பாப்பே செஞ்சது துரோகம்.அவர் மீது நாங்கள் கோபமாக இருக்கின்றோம்.வெளிப்படையாக பேசிய பிரபல வீரர்..!

விரைவில் நடக்கவிருக்கும் கோப்பா அமெரிக்கா தொடரில் விளையாட தயாராகி வருகின்றார் மெஸ்ஸி. இந்நிலையில் 2022 இல் அர்ஜென்டினாவுடன் தனது முதல் உலகக் கோப்பையை வென்ற மெஸ்ஸிக்கு 2026 உலகக் கோப்பையின் போது 38 வயது இருக்கும். எனவே தேசிய அணியில் இருந்து ஓய்வு பெறுவது குறித்த கேள்விகள் தொடர்ந்து நீடித்து வருகின்றன. அவர் 2016 இல் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகக் கூறினார், ஆனால் பின்னர் தன் முடிவை மாற்றி மீண்டும் விளையாட துவங்கினார்.

கோப்பையையும் வென்று சாதனை படைத்தார். ஃபிஃபா உலகத் தரவரிசையில் அர்ஜென்டினா இப்போது உலகின் நம்பர் 1 அணியாக இருந்து வருகின்றது. அதற்கு மெஸ்ஸியும் ஒரு காரணம். இதையடுத்து அவரிடம் 2026 ஆம் ஆண்டு உலகக்கோப்பை பற்றி கேட்டபோது, இது என் உடல் நிலையை பொறுத்தது தான். அந்த சமயத்தில் நான் எப்படி உணர்கிறேன் என்பதை பொறுத்து தான் இந்த முடிவை எடுக்கமுடியும் என்றார் மெஸ்ஸி.

மேலும் வயதாகிறது என்பது உண்மைதான். ஆனால் வயது வெறும் எண்கள் தான். எனவே உடல் நிலை தான் முக்கியம். அதை பொறுத்து தான் முடிவெடுக்க முடியும் என்றார் மெஸ்ஸி. மேலும் நெய்மருடன் மீண்டும் இணைந்து விளையாடுவதை பற்றியும் அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த மெஸ்ஸி, மீண்டும் நெய்மருடன் இணைந்து விளையாடுவது கடினம். அவர் வேறு பாதையில் செல்கின்றார், நன் வேறு பாதையில் செல்கின்றேன். எனவே மீண்டும் இணைந்து விளையாடுவது கடினம் என்றார் மெஸ்ஸி.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments