Mr & Mrs சின்னத்திரை
சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோக்கள் என சொன்னதும் முதலில் நமக்கு விஜய் டிவி தான் நியாபகம் வரும்.
காரணம் இதில் ஏகப்பட்ட ரியாலிட்டி ஷோக்கள் வந்துள்ளன, சில ஹிட்டடித்துள்ளது. ஒருசில நிகழ்ச்சிகள் வந்த வேகம் தெரியாமல் முடிந்துவிடும்.
அப்படி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நிகழ்ச்சியில் ஒன்று தான் Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சி. இதில் பிரபலங்கள் ரியல் ஜோடிகளுடன் போட்டிபோடுவார்கள்.
நிகழ்ச்சி மொத்தமும் மிகவும் கலகலப்பாக இருக்கும்.
முழு போட்டியாளர்கள்
மாகாபா ஆனந்த், நிஷா தொகுத்து வழங்க ராதா, கோபிநாத் நடுவர்களாக வர யார் யார் போட்டியாளர்களாக வரப்போகிறார்கள் என்ற முழு விவரம் இதோ. இந்த 5வது சீசனில் நிறைய சீரியல் பிரபலங்கள் உள்ளனர்.
யார் யார் என்று பாருங்கள்,
- சமீர்-அஜீபா
- வைஷாலி-தேவ்
- அமித்-ரஞ்சனி
- லின்சி-சுரேந்தர்
- தாமரை-பார்த்தசாரதி
- கொட்டாச்சி-அஞ்சலி
- நாஞ்சில் விஜயன்-மரியா
- இந்திரஜா-கார்த்திக்
- நவீன்-சௌமியா
- ஆஷிக்-சோனு
- மீராகிருஷ்ணா-சிவகுமார்