இந்திரஜா
தமிழ் சினிமாவில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் தனது திறமையை வெளிக்காட்டி பின் தொடர்ந்து விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலக்கி வந்தவர் ரோபோ ஷங்கர்.
அங்கிருந்து அப்படியே வெள்ளித்திரை பக்கம் வந்தவர் தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார்.
அவர் பிரபலமான நேரத்தில் அவரது மகள் இந்திரஜா விஜய்யுடன் பிகில் படத்தில் நடித்து ரசிகர்களால் பாண்டியம்மா பாண்டியம்மா என பெரிய அளவில் கொண்டாடப்பட்டார்.
அதன்பிறகு இந்திரஜா 1, 2 படங்கள் நடித்தார்.
லேட்டஸ்ட் ஷோ
தொடர்ந்து நடிப்பார் என்று பார்த்தால் கார்த்திக் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்தார்.
இந்த நிலையில் இருவரும் ஜோடியாக விஜய் டிவியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட Mr&Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
அப்போது நடிகை ராதா குழந்தை எப்போது என்று கேள்வி கேட்க அதற்கு இந்திரஜா, எங்கள் இரண்டு வீட்டிலும் ஒரே ஒரு குழந்தை என்பதால் இரண்டு வீட்டாரும் எங்கள் குழந்தையை எதிர்பார்க்கின்றனர்.
எங்களுக்கும் அதுதான் விருப்பம், சீக்கிரமே எங்களுக்கு குழந்தை பிறக்கும் என்று கூறியுள்ளார்.